2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நிதியமைச்சர் பாராளுமன்றில் விசேட உரை

Freelancer   / 2022 மே 03 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்திற்கும், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தலைமையிலான பிரிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து நிதியமைச்சர் நாளை (4) பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. புதன்கிழமையும் வியாழக்கிழமையும் காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து இதுவரை திகதி தீர்மானிக்கப்படவில்லை, எனவும் குற்றப்பிரேரணை குறித்து சட்ட ஆலோசனை கோரப்பட்ட நிலையில் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X