Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (18) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக எவ்வளவோ பேர் தம்பட்டம் அடித்தாலும் எவரும் செய்யவில்லை. எனக்கு பதவிகள் வேண்டாம். நான் ஒன்று உறுதியளிக்கிறேன். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும்.
ராஜபக்ஸவிடம் முறையிட்டு நாட்டை திவாலாக்கிய குழுவின் பிரதான பாதுகாவலர் தான் ஜனாதிபதி. ராஜபக்ஸவை பாதுகாக்கும் பொலிஸ்மா அதிபர் ரணில் விக்ரமசிங்க என்றும் குறிப்பிட்டார். R
19 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago