Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 23 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
நீண்டநாள் பதவியில் இருக்கமாட்டேன் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து மிக விரைவில் வெளியேறிச் செல்வேன் என்றார்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் மாற்றப்பட்டுள்ள புகைப்படங்களில், ஐந்தாவது தடவையாகவும் அவருடைய படம் மாட்டப்படுமென எழும்பிய குரலால், அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.
நாடாளுமன்றத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த இடத்திலிருந்து மிக விரைவில் செல்வதே எமது நோக்கம் என்றார். இதன்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் ‘’நாங்கள் இந்த இடத்திலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்வோம்’’ என தெரிவித்தனர்.
இவ்வேளையில் அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த கடந்த கால எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை மஹிந்த ராஜபக்ஷ பார்த்துக்கொண்டிருந்தார்.
“சார்...சார்... இவ்விடத்தில் உங்களின் படம் ஒரு இடத்தில்தான் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் படம் நான்கு இடங்களில் இருக்கின்றன. அவரின் படம் 5ஆவது தடவையாகவும் இங்கு மாட்டப்பட வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்” என வீரவன்ச கூறிவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
25 minute ago
1 hours ago