2025 மே 14, புதன்கிழமை

நீதிபதி விவகாரம்: நாளை முக்கிய தீர்மானம்

Editorial   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில்   புதன்கிழமை (04) இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். 

அடுத்த கட்ட போராட்டமாக ஹார்த்தலை அறிவிப்போம் என சிலர் கருத்து தெரிவித்த போதிலும் , அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்து   வெள்ளிக்கிழமை (06) அடுத்த கட்ட போராட்டம் தொடர்பிலான அறிவிப்பை அறிவிப்போம் என கூறி கூட்டத்தை நிறைவு செய்துள்ளனர். 

நீதிபதிக்கு நீதி கோரி   யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (04)   முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .