Freelancer / 2022 நவம்பர் 17 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.
இந்த குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய குறித்த இளைஞர் இன்று மாலை தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியும் இருக்கின்றார். இதன் போது நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
எனினும் இதுவரையில் இளைஞரைக் காணவில்லை. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026