S. Shivany / 2021 ஜனவரி 14 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். சாஜஹான்
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் புதிதாக 23 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, நீர்கொழும்பு நிர்வாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த சோலங்க தெரிவித்தார்.
நகரின் சில பிரதேசங்களில் 155 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் தலாதூவ தொழிலாளர் வீடமைப்பு தொகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த வீடமைப்பு தொகுதியில் வசிப்பவர்களில் அதிகமானவர்கள் நீர்கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் இதுவரை 391 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026