2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீர்கொழும்பு சிறையிலிருந்து 56 கைதிகள் விடுதலை

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

சிறு குற்றங்களை புரிந்த  குற்றச்சாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள்,   இன்று  (28) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை  கட்டுப்படுத்தும் வகையில்,  இவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை ஆணையாளரின் வழிகாட்டலில்,  நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜசூரியவின் உத்தரவுக்கமைய,  இந்த வாரத்தில் மொத்தமாக 170 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனரென, நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி  ஆர்.டப்ளியூ. டப்ளியூ  சம்பாவோ தெரிவித்தார்.

பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள், பிணை வழங்கப்பட்டு பிணையில் செல்ல வசதியில்லாத கைதிகள், இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அவர்கள் வசிக்கும் பிரதசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சிறைச்சாலை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

நாட்டிலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பது ஜனாதிபதி, மற்றும் பிரதமரின் திட்டமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .