Nirosh / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் தற்போதுவரையில் நேற்றைய (11) தினமே அதிகளவானப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று மாத்திரம் 17 ஆயிரத்து 425 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் மொத்தமாக 88 ஆயிரத்து 964 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6 ஆயிரத்து 810 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 31 ஆயிரத்து 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 22 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளதுடன், தொடர்ந்து 8 ஆயிரத்து 398 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago