Freelancer / 2026 ஜனவரி 07 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போஷாக்கான மற்றும் விசேடமான உணவுகளை வழங்கும் புதிய முன்னோடித் திட்டம், முதன்முறையாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நோயாளிகளின் பசியைத் தூண்டும் வகையிலும், ஊட்டச்சத்து குறையாமலும் இருக்க விசேடமாக வடிவமைக்கப்பட்ட தட்டுகளில் உணவு வழங்கப்படுகின்றது.
இதன்படி சோறு, மரக்கறிகள், மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அனைத்தும் தனித்தனியாகப் பரிமாறப்படும்.
நோயாளிகளின் திருப்தியை அதிகரிப்பதுடன், தரமான உணவு மூலம் அவர்களின் விரைவான குணமடைதலை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். (a)

6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago