2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

George   / 2016 நவம்பர் 30 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதுமுள்ள வைத்தியர்கள், இன்று புதன்கிழமை (30), பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

காலை 8 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று தெரிவத்திருந்தது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரம் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மகளிர் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு
ஆகியவை வழமைபோல இயங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, தனியார் வைத்திய நிலையங்களும் மூடப்பட்​டிருக்கும் என்று கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .