2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற நீர்த்தடாகத்தில் தத்தளிக்கிறது கார்

Kanagaraj   / 2016 நவம்பர் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக இருக்கின்ற, நீர்த்தடாகத்துக்குள் காரொன்று விழுந்துவிட்டது. அக்கார் அரைவாசி மட்டுமே மூழ்கியுள்ளது. கடும் மழை பெய்துகொண்டிருப்பதனால், அக்காரை மீட்டெடுப்பதில் பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அரும்பொருட்காட்சியத்தின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாகன​மே, இவ்வாறு நீர்த்தடாகத்துக்குள் விழுந்துள்ளது.பணிப்பாளர் நாயகத்தை நாடாளுமன்ற வளாகத்தில் இறக்கி விட்டு, திரும்பிச் செல்லும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நீர்த்தடாகம் ஆழம் குறைந்தது என்பதனால் எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .