Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதுடன் நீதிமன்றத்தை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11பேரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.
ராவணா பலய அமைப்பின் அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், முன்னாள் எம்.பியான ஹக்மீமன தயாரத்ன தேரர்கள் உள்ளிட்டோர், கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமையன்று பொலிஸில் சரணடைந்தனர்.
அனைவரும், நேற்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னரே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11பேரில் ஐவர், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
12 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
45 minute ago