2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நான்கு மாணவர்களையும் விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

         

- சேனரத் பண்டார

மாணவியை பகடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று(5) கைதுசெய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுவிக்குமாறு கோரி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் பேராதனை பல்கலைக்கழக மாணவ சங்கித்தின் ஏற்பாட்டில் கலஹா சந்தியில் நடைபெற்றது.

பொய்யான  குற்றச்சாட்டின் பேரில் மேற்படி மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் கோரி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பேரானை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் சதுர சிந்தக, ' நான்கு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டமையானது பெரும் அநீதியானது  அவர்களை விடுதலை செய்யுங்கள்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X