2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நினைவு வாரத்தை அனுஷ்டித்தாலும் இனவாதத்துக்கு இடமளியோம்

Princiya Dixci   / 2016 மே 12 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், இதன்மூலம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தேசிய சகவாழ்வு  கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

1948ஆம் ஆண்டு முதல் உயிரிழந்த தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம், நேற்று 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல், எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஏற்கெனவே அறிவித்துள்ளார். 

இந்த நினைவு வாரத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கென எண்மர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 'யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. எனினும், இதன் மூலம் இனவாதம் தூண்டப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது' என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

'இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், இப்போதும் வடக்கு மற்றும் தெற்கில் இருந்துகொண்டு தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டுதான் வருகின்றனர்' என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X