Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, கொழும்பு, ஆவணமாக்கல் கேட்போர் கூடத்தில் 'கூட்டு எதிர்ப்பு' என்ற பதாகையின் கீழ், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்றுத் திங்கட்கிழமை நடத்தினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்,
சுவாரசியமான முறையிலும், வரலாற்றை உதாரணம் காட்டியும் பதிலளித்தார்.
களனியில் இன்னுமொரு மேர்வின் உருவாகிவிட்டாரா எனக்கேட்டமைக்குப் பதிலளித்த அவர், என்னுடைய தந்தையின் பெயர், என்னுடைய பிறப்பத்தாட்சி பத்திரத்திலும், என்னுடைய சகோதரன் மற்றும் சகோதரியின் பிறப்பத்தாட்சிப் பத்திரங்களிலேயே இருக்கின்றது. அவற்றை மீறி, அவர், பெயர் போட்டுக்கொள்ளுபவர் அல்லர்.
அதேபோல, நானும், இவ்வாறான தேவையில்லாத விடயங்களுக்குள் சிக்கி பெயர் போட்டுக் கொள்ளமாட்டேன். நான் பயப்பிடாதவன். என்னைத்தவிர எவரும், களனியில் இன்னுமொரு மேர்வினாக உருவாகமுடியாது' என்றார்.
'அதுசரி, மறைந்த தேரர், மாதுலுவாவே சோபித்தவை சந்தித்து நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டீர்களாமே' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
'நான் சென்று தேரருடன் பேசினேன். அது உண்மைதான். அதனைத் தெரிந்துகொண்ட மஹிந்த என்னை அழைத்துக் கேட்டார், „நீங்கள் எங்கு சென்றாலும் கூறுவதற்கு, எங்களிடத்தில் ஆள் இருக்கின்றது... என்றார்.
ஏன், நிம்மதியாகத் தொலைபேசி அழைப்பையேனும் எடுக்கமுடியாது. அவ்வளவுக்கு அவ்வளவு நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்தோம்.
நல்லவேளை, உடுவே தம்மாலோக்க தேரர் அவ்விடத்துக்கு வந்துவிட்டார். மாதுலுவாவ தேரரரை அழைத்துவருமாறு அவர் (மஹிந்த ராஜபக்ஷ) கூறியிருந்தார் என்று எனக்கு நினைவுபடுத்தினார்.
அதனை மீண்டும் ஞாபகப்படுத்திய நான், தேரரை அழைத்துச்சென்றேன். அலரி மாளிகைக்குப் போனதன் பின்னர், அது ரஷ்ய நாட்டு நாய், இது ஐரோப்பிய நாய் என்று விளங்கப்படுத்திக் கொண்டிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
குறுக்கிட்ட தேரர்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக நாளைக்கே சொன்னால், நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன்... என்றார்.
அவ்வளவுதான், தேரரை அழைத்துச் செல்லுமாறு கண்ணடித்து, எனக்குச் சைகை காட்டினார். நான், எதுவுமே பேசாமல் அழைத்துகொண்டுவந்துவிட்டேன.
நிறைவேற்று அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டா மற்றும் பசில் ராஜபக்ஷக்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். எனினும், அதனைச் செய்யவில்லை. நாங்கள் சிறுநீர் கழிக்கச் சென்றால்கூட, எத்தனை நிமிடங்கள் சிறுநீர் கழித்தோம் என்று கோட்டா குறிப்பெடுத்துக் கொள்வார்' என்றும் மேர்வின் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago