Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பிரதான நகரங்களுக்கு அண்மையில் ஏற்படுகின்ற வாகன நெரிசல்கள் காரணமாக, வருடத்துக்கு 375 பில்லியன் ரூபாய் இழக்கப்படுகின்றது என்று மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டின் பிரதான நகரங்களுக்கு அண்மையில், வாகனங்களின் வேகம் மணித்தியாலத்துக்கு 20 கிலோமீற்றர் முதல் 12 கிலோமீற்றர் வரை குறைந்துள்ளது.
பொதுவாகப் பார்க்கின்ற போது, மூன்று தசாப்தத்துக்கு முன்னர் கொழும்பு நகரத்துக்கு நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 323 ஆயிரம் வாகனங்கள் உட்பிரவேசித்தன. தற்போதைய நிலையில் அது, ஐந்து இலட்சமாக மாறிவிட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வீதிகளில் 85 சதவீதத்தை, தனியார் வாகனங்களும் ஏனைய 15 சதவீதத்தை பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களும் பிடித்துக்கொண்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
36 minute ago
4 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
26 Aug 2025