2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க அமைச்சரவை அங்கிகாரம்

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், புதிய தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்குமான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த முன்மொழிவின்படி பிரதமரின் பங்குபற்றுகையுடன் இது தொடர்பாக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கும் அந்த உப- குழுவினூடாக எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் சட்ட வரைபு அதிகாரிகளுனூடாக சட்ட வரைபை மேற்கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இது தொடர்பில் கரிசனை காட்டும் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கவனத்திற்கொள்ள உப-குழு நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி எதிர்பார்கின்றார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .