Editorial / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கம் விருப்பமின்றியே உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையைப் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா, அன்றைய பாராளுமன்ற அமர்வில், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடே இதைக் காட்டிக் கொடுத்து விட்டதாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அறிக்கையின் சில பக்கங்களைக் கிழித்து, சில பரிந்துரைகளைக் குப்பைக் கூடையில் போடவுமே அரசாங்கம் எத்தனித்தது எனத் தெரிவித்த அவர், அந்த அறிக்கையைத் தங்களுக்கும் மக்களுக்கும் வழங்குமாறு பேராயர் உள்ளிட்டோர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தனர், அதனால் எத்தனிப்புகள் நிறைவேறவில்லை என்றார்.
“மறைக்கப்படவிருந்த அறிக்கை, இன்று பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளமைக்கு அவ்வாறானவர்களின் அழுத்தங்கள் காரணமாக இருந்தன” என்றார்.
பேராயர் மீது சில மறைமுக தாக்குதல்களை, முன்னெடுத்துள்ளதை அவதானிக்கலாம். பேராயரை அமைதியடையச் செய்து, மீண்டும் அந்த அறிக்கையை மூடிமறைக்க, சில சக்திகள் செயற்படுவதாக எமக்குத் தெரிய வந்துள்ளது. எனவே, பேராயர் கூறியதைப் போன்று, இந்த விடயம் சர்வதேசத்துக்குச் சென்றால், இதன் பின்னணியிலுள்ள மூளைசாலி யார் என்பது, கட்டாயம் தெரியவரும் என்ற பயத்தில், அந்தச் சக்திகள் செயற்படுகின்றனர் என்றார்.
“எனவே, 2019இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலால், அதிக அரசியல் லாபம் யாருக்குக் கிடைத்தது என்பது குறித்து, உரிய விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், சஹ்ரானுடன் இதையும் குழிதோண்டிப் புதைப்பதாயின் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025