Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 மார்ச் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் ஆடை அணியாமல், பெம்பஸ் மட்டுமே அணிவிக்கப்பட்டிருந்த பச்சிளம் பாலகனின் மீது, பிரம்பொன்றால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய இளம் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் துடிதுடித்துவிடுகின்றனர். அந்தளவுக்கு, சிசுவின் கதறலுடன் கூடிய காட்சிகள், மிகக்கொடூரமானவையாகவே இருகின்றன.
பிரம்பால் விழும் ஒவ்வோர் அடியின் வலியையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அப்பச்சிளம் பாலகன் வீரிட்டுக் கத்திக் கதறுகிறது. எனினும், அத்தாய் ஒற்றைக் கையால், அக்குழந்தையின் கையொன்றைப் பிடித்து, தரதரவென இழுத்துச்சென்று அவ்வீட்டின் அறையொன்றுக்குள் வைத்து, மறுபடியும் மறுபடியும் அடிக்கின்றார்.
மல்லாக்க புரண்டு கதறும் அந்தப் பச்சிளம் பாலகன், இரண்டு, மூன்று தடவைகள் தான் உறங்கும் ஏணையைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றது. எனினும், தாய் விடாமல் அடிக்கின்றாள். அடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, சிறு தூரத்துக்கு தவழ்ந்து செல்லவும் முயற்சிக்கின்றது. பின்னர், அத்தாயும் அறையின் கதவை அடைத்துக்கொள்கின்றாள். அத்துடன் காணொளியும் நிறுத்தப்பட்டு விடுகின்றது.
இவ்வாறான மிகக் கொடூரமான சம்பவம், யாழ்ப்பாணம், அரியாலை- வேளாங்கண்ணி நகர் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த தாயின் கணவன் வெளிநாட்டில் தொழில் செய்வதாகவும், திருகோணமலையைச் சேர்ந்த இந்தக் குடும்பம் சமீபத்தில்தான் அரியாலைப் பகுதிக்குக் குடிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ தரவேற்றப்பட்டதன் பின்னர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் 24 வயதான அந்தத் தாயை கைது செய்துள்ளனர். எட்டு மாதங்களேயான அந்தப் பாலகனும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளான்.
.கைது செய்யப்பட்ட அப்பெண்ணை, யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குவைட் நாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது, இந்தியப் பிரஜையும் நானும் சேர்ந்து வாழ்ந்தோம். அதன் மூலமாக இந்த பிள்ளை கிடைத்தது.
கொவிட்-19 இன் போது நானும் குழந்தையும் நாட்டுக்குத் திரும்பினோம். எனினும், எங்களுடைய ஆவணங்களை அடங்கிய பொதி காணாமல் போய்விட்டது.
இந்நிலையில், கடந்த ஒருமாதமாக அவர், (கணவன் )எனக்கு பணம் அனுப்பவில்லை. ஆகையால், பிள்ளையை துன்புறுத்தி, அந்த வீடியோவை அவருக்கு அனுப்பி, செலவுக்கான பணத்தை பெறவே இப்படி செய்தேன்.
முதல்தடவையாகவே குழந்தை இவ்வாறு துன்புறுத்தினேன். இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என, பொலிஸாரிடம் கூறிய அப்பெண், குழந்தை பொலிஸாரிடம் கொடுக்க மறுத்துவிட்டார்.
எனினும், வாக்கமூலம் பெறுவதற்காக, குழந்தை பெற்றுக்கொண்ட பெண் பொலிஸ் அதிகாரி, அப்பெண் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago