Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் பழைய அறையொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20, மிமீ 3.2 தோட்டாக்கள் 24 , மி.மீ. 9 தோட்டாக்கள் 107 மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
26 minute ago
1 hours ago