Freelancer / 2023 மார்ச் 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக, மே மாதம் 13 ஆம் திகதி முதல், மே மாதம் 24 ஆம் திகதிவரை, முதலாம் தவணையின் இரண்டாம்கட்ட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி முதல், 23 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் கல்வி ஆண்டின், இரண்டாம் தவணை விடுமுறை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (a)
5 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago