Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
நிலாவெளி பகுதியில் ஒரு பெண்ணிடம் இருந்து வெளிநாட்டுப் பயணத்துக்கான பொலிஸ் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் செவ்வாய்க்கிழமை (16) மதியம் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலாவெளி காவல் நிலையத்தில் பணிபுரியும் சந்தேக நபர், பொலிஸார் அறிக்கையை வழங்க லஞ்சம் கோரியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIBC) சோதனைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் ஏறாவூரில் வசிப்பவர், தற்போது கிண்ணியா, மாஞ்சோலையில் தற்காலிகமாக வசித்து வருகிறார். சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் குச்சவேலி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
37 minute ago
42 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
17 Dec 2025
17 Dec 2025