2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பணமின்றி பறந்த இவர்கள்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 9 அமைச்சர்கள், இரு ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட சிலர், பணம் செலுத்தாத நிலையில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 2016 ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச கருமப் பணிகளுக்காக, இவர்கள் இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்ற விவரங்களடங்கிய அறிக்கையொன்றை, நேற்று வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, மேற்படி விடயம் தொடர்பிலான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .