2026 மார்ச் 25, புதன்கிழமை

பாதுகாப்பு கேள்விக்குறி: சர்வதேசத்துக்கு அவசர கடிதம்

Editorial   / 2026 மார்ச் 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச வෘத்தியல் அமைப்புகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான் மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடிதம் அனுப்பப்பட்டுள்ள சர்வதேச அமைப்புகள்:

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு, இளம் சட்டத்தரணிகளின் சர்வதேச சங்கம், சர்வதேச ஜனநாயக சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW), சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு, சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு, மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளிட்ட 12 முக்கிய அமைப்புகளுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்:

  • துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: நாட்டில் நவீன ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட படுகொலைகள் அதிகரித்துள்ளன.
  • உயிரிழப்புகள்: கடந்த ஆண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோரும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9 பேரும் இவ்வாறான வன்முறைகளால் உயிரிழந்துள்ளனர்.
  • நிர்வாகத் தோல்வி: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தோல்வியடைந்துள்ளதாக அக் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறை மற்றும் சிவில் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .