Editorial / 2026 மார்ச் 25 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம், இன்று (25) காலை 08 மணியளவில் தனது 75ஆவது வயதில் காலமானார்.
ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி ஜெஸ்மின் சலீம் அவர்களின் அன்புத் துணைவரான இவர், அகீலா மற்றும் அகீல் ஆகியோரின் பாசமுள்ள தந்தையுமாவார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் தடம் பதித்த ஏ.எல்.எம். சலீம், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் உள்ளிட்ட நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராகக் கடமையாற்றியுள்ளார். சிறந்த ஆய்வுக் கட்டுரையாளராகவும் திகழ்ந்த அவர், ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.
எழுத்துத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருந்த இவர், செய்திகளை எழுதுவதில் புதிய வடிவங்களையும் துல்லியமான சொற்பிரயோகங்களையும் கையாண்டார். அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய துறையினரின் குறைபாடுகளை அச்சமின்றி சுட்டிக்காட்டும் துணிச்சல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஊடக உலகின் ஒரு 'சிங்கமாக' நெஞ்சு நிமிர்த்திப் பணியாற்றிய அவரது ஆளுமை, பலரையும் வியக்க வைத்தது.
அதேவேளை, அனைவரிடமும் மிகுந்த அன்புடனும், நகைச்சுவை உணர்வுடனும் பழகக்கூடிய பண்பாளராகவும் அவர் காணப்பட்டார்.
அன்னாரின் ஜனாஸா (உடல்) இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து நிந்தவூர் ரவாஹா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago