2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

புத்தக வேன் தீப்பிடித்து எரிந்தது

Editorial   / 2026 ஜனவரி 04 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலன்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுவெவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 10.00 மணியளவில் வேனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வேனில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பாடசாலையின் பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் இருந்தன, அவை தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

தீ விபத்து குறித்து உடனடியாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், தீ வேகமாகப் பரவியதால், வாகனத்தையோ அல்லது உள்ளே இருந்த சொத்தையோ காப்பாற்ற முடியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .