S.Renuka / 2026 ஜனவரி 26 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரை ஏமாற்றி அருகே வசித்து வரும் 2 கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை செல்போனில் வீடியோ எடுத்து தட்டிக்கேட்டபோது, ஏற்பட்ட தகராறில் அந்த பெண் இறந்துள்ளார். தற்போது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம பதேபூர் மாவட்டம் மோகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் சிங். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா சிங். ஒரே கிராமம் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, சச்சின் சிங் மற்றும் ஸ்வேதா சிங் ஆகியோர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, இருவரும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்று, அங்கு அவர்கள் தொழிற்சாலையில் வேலை செய்துள்ளனர்.
அதன்பிறகு இருவரும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு திரும்பி, மகாராஜ்பூரில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, குடும்பம் நடத்தியுள்ளனர்.
இதற்கிடையே தான் ஸ்வேதா சிங்கின் நடத்தையில் சச்சின் சிங்கிற்கு சந்தேகம் வந்துள்ளது. அதாவது அவரது வங்கி கணக்கிற்கு அதிகளவில் பணம் வந்து விழுந்துள்ளது. இதுபற்றி சச்சின் சிங் கேட்டபோது, தனது பாட்டி அனுப்பி வைப்பதாக ஸ்வேதா சிங் கூறியுள்ளார். ஆனால், சச்சின் சிங் நம்பவில்லை. ஸ்வேதா சிங்கிற்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகித்துள்ளார்.
அதாவது அவர்கள் வசித்து வரும் வீட்டின் அருகே இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களும் சச்சின் சிங்கின் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி படித்து வந்துள்ளனர். இந்த கல்லூரி மாணவர்களுடன் ஸ்வேதா சிங்கிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சச்சின் சிங் சந்தேகித்துள்ளார்.
இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று சச்சின் சிங் நினைத்து, சம்பவத்தன்று இரவில் நண்பர்களுடன் ‛பார்ட்டி' உள்ளது. இதனால் வீட்டுக்கு இரவில் வரமாட்டேன் என்று தனது மனைவி ஸ்வேதா சிங்கிடம் கூறியுள்ளார். இதனை ஸ்வேதா சிங்கும் நம்பினார். ஆனால், சச்சின் சிங் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, மனைவி ஸ்வேதா சிங் வீட்டு உள்ளே 2 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சச்சின் சிங், கள்ளக்காதலை உறுதி செய்துள்ளார். மேலும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து இருப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தபோது, இதனை பார்த்து ஸ்வேதா சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த மாணவர்களை வைத்து கணவர் சச்சின் சிங்கை தாக்கியுள்ளார். இந்த தகராறு பற்றி உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விரைந்து சென்று சச்சின் சிங், அவரது மனைவி ஸ்வேதா சிங் மற்றும் 2 மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது சச்சின் சிங், இந்த பிரச்சனை பற்றி தனது மனைவியிடம் பேசி தீர்த்து கொள்வதாக கூறினார். இதையடுத்து, பொலிஸார் சச்சின் சிங் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா சிங் ஆகியோரை விடுவித்துள்ளனர். மாறாக இரு மாணவர்களை பொலிஸ் நிலையத்திலேயே வைத்திருந்தனர். இதையடுத்து, வீடு திரும்பிய ஸ்வேதா சிங், அந்த இருவரையும் விடுவிக்கும்படி பொலிஸாரிடம் கூறும்படி சச்சின் சிங்கிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமான ஸ்வேதா சிங், இருவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரிந்து சென்று அவர்களுடன் வாழ்க்கை நடத்துவதாக மிரட்டியுள்ளார். இது சச்சின் சிங்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சச்சின் சிங் தனது மனைவி ஸ்வேதா சிங்கின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார். மேலும், கொலையை மறைக்க விரும்பிய சச்சின் சிங் போர்வையில் ஸ்வேதா சிங்கின் உடலை சுற்றி வீட்டில் வைத்த்துள்ளார். அதன்பிறகு அவர் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். பிறகு ஸ்வேதா சிங்கின் உடலை கைப்பற்றி பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago