2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

போதைப்பொருளுடன் 37 வயது நபர் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் 1.66 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 308 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் ("ஐஸ்") போதைப்பொருளை வைத்திருந்த 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை (8) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸ் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .