2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

பேருந்தில் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்

Editorial   / 2025 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மனைவி தியத்தலாவை ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளின் தாயான மனைவிக்கு 32 வயது, அவர்கள் பண்டாரவளையில் உள்ள லியங்கஹவெல பலகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் கணவர் பேருந்தின் பின் இருக்கையில் இருந்து தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். சந்தேக நபரான கணவர் தற்போது பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் நாடு திரும்பியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .