2021 மே 14, வெள்ளிக்கிழமை

பொதுமக்களுக்காக ஓடாத பஸ்களுக்கு சிக்கல்

Niroshini   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் ஜெயரட்னம்.                                                                               

கொரோனா அசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் அன்றாட வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவைக்கு  உரிய முறையில் சேவையை வழங்காத தனியார் பஸ்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்து, அவற்றை புதிய பஸ் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, மேல் மாகாண வீதிப்  பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது மேல் மாகாணத்தில், அதிகமான தனியார் பஸ் உரிமையாளர்கள், தமது பஸ்களை  காலையும் மாலையும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் போக்குவரத்து  பணிகளுக்கு ஈடுபடுத்து வருவதாகவிம், இதன் பின்னரே, வீதிப்  பயணிகள் போக்குவரத்துத் சேவையில் பஸ்க்களை  ஈடுபடுத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .