2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Freelancer   / 2026 பெப்ரவரி 26 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய போலிஸ் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் மற்றும் களுத்துறை பிரிவு குற்ற விசாரணை பணியகம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் படங்களில் காணப்படும் சந்தேகநபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

பொறுப்பதிகாரி - களுத்துறை வடக்கு பொலிஸ்  நிலையம்: 071 - 8591692
களுத்துறை பிரிவு குற்ற விசாரணை பணியகம்: 071 - 8596395  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .