2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதிய பரீட்சை ஆணையாளர் நியமனம்

S.Renuka   / 2025 மே 08 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பரீட்சை ஆணையாளராக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளராகப் பணியாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜெயசுந்தரவின் பதவிக்காலம் மே 06, 2025 அன்று முடிவடைந்தது.

அதன்படி, இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான ஏ.கே. சுபாஷினி இந்திகா குமாரி லியனகேவை காலியாக உள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகப் பதவிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .