R.Tharaniya / 2025 மே 19 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சென்றுள்ள
காரணத்தினால், அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஞாயிங்ஞக்கிழமை (18) காலை சுவிட்ஸர்லாந்துக்குப் புறப்பட்டார்.
இந்த மாநாடு மே 19 முதல் 27 வரை ஜெனீவாவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago