2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பதுளை தோட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஊவா தமிழ் அறவாரியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைக்கு தான் 5 இலட்சம் பெறுமதியான அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட நிவாரணங்கள் தாமதிக்காது வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தயுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .