2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

போதை விருந்து: 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து நடப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 22 சிறுமிகள் உள்பட 65 பேர் போதையில் இசைக்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் பொலிஸார் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது 2 பேர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே சமூகவலைத்தளம் மூலமாக ஆட்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X