Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், மாமியர்-மருமகன் இடையே நடந்த தகாத உறவு காரணமாக, ஒரு இளம் பெண் தனது கணவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயது கொண்ட சிவானி என்பவரின் உடல், தன் சொந்த வீட்டின் வாசலில் கிடந்தது. கணவன் பிரமோத் தப்பி ஓடியுள்ளார், அதேசமயம் மாமியார் தனது வீட்டில் இருக்கிறார். போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காஸ்கஞ்சின் கஞ்ச்துந்த்வாரா பகுதியைச் சேர்ந்த பாளியா கிராமத்தைச் சேர்ந்த சிவானி, 2018ஆம் ஆண்டு நக்லா பார்சி கிராமத்தைச் சேர்ந்த பிரமோத்தை மணந்தார். பிரமோத் டெல்லியில் தனியார் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
சிவானியின் தந்தை நாராயண சிங் கூறுகையில், "எனக்கு இரு பெண்களும், இரு மகன்களும் உள்ளனர். இரு பெண்களும் திருமணமாகியுள்ளனர். மகன்கள் விவசாயத்தில் உதவுகின்றனர். சிவானியின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு, என் மனைவி பிரேம்வதி என் மருமகனுடன் தகாத உறவைத் தொடங்கினார்.
மாமியரை தான் அவன் முதலில் சந்திப்பான் என்று கூறியநாராயண சிங் "முதலில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், மருமகன் வீட்டுக்கு வருகை அதிகரித்தபோது, மருமகளைத் தாக்கத் தொடங்கியபோது சந்தேகம் ஏற்பட்டது. என் மனைவியுடன் தனிமையில் இருந்த போது ஒருமுறை கையும் களவுமாக பிடித்தோம்
மருமகன் குடும்பத்திற்கும் இது தெரிந்திருந்தது. நான் எதிர்த்தபோது, இருவரும் என்னை கடுமையாகத் தாக்கினர். என் மகளை பிரமோத் மோசமாக நடத்தினான்.
"சிவானிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் - ஒன்று 2.5 வயது, மற்றொன்று 6 மாதங்கள். " மகள் தன் தாயையும் கணவனையும் பலமுறை அறிவுறுத்தினாள், ஆனால் இருவரும் கேட்கவில்லை. நானும் என் மனைவியை அறிவுறுத்தினேன், ஆனால் அவள் சண்டையிடத் தயாராகிவிடுகிறாள். என் மருமகன் என் மகளைத் தடையாக நினைத்து கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டான் என் மருமகன்" என்று நாராயண சிங் கூறினார்.
ஞாயிற்று கிழமை இரவு, சிவானி தூக்கில் தொங்கிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் வந்தபோது, உடல் வாசலில் உள்ள கட்டில் மீது கிடந்தது. சொந்தக்குடும்ப வீட்டினர் யாரும் இல்லை. சிவானியின் சகோதரர் மனோஜ் குற்றம்சாட்டினார்,
"மாமியர் பிரேம்வதியும் மருமகன் பிரமோத்தும் இடையே கள்ள உறவு இருந்தது. இதனால், சிவானி நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தாள்."சிவானியின் மாமியாரின் அண்ணன் நேம்சிங் கூறுகையில், "பிரமோட் என் சகோதரியுடன் கள்ள உறவு வைத்திருந்தார். இதனால் அவர் சிவானியை அடிக்கடி தாக்குவார். அவர் சிவானியை கொன்றுவிட்டு உடலை தூக்கில் தொங்க விட்டு தப்பினார்" என்றார்.
"சிவானியின் குடும்பத்தினர், கணவன் பிரமோத், சகோதரன் மற்றும் மாமனார்-மாமியருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் நக்லா பார்சி பகுதியின் சித்புரா பிராந்தியத்தில் நடந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சில அநாகரிகமான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அதில், ஒரு வீடியோவில் மருமகன் பிரமோத்தின் உள்ளாடையை கையில் வைத்திருக்கும் அவரது மாமியார்.. இது தான் என் உலகம் என பேசக்கூடிய கண்றாவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொடர்ந்து, போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago