Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பனாமாவின் சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா நிறுவனத்திலிருந்து வெளியாகிய ஓப்ஷோர் நிறுவனங்களை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்ப்பட்டியலில், பாகிஸ்தானிய பிரதமர் முஹம்மட் நவாஸ் ஷெரிப்பின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என துப்பறியும் பத்திரிகையாளர்களின்; சர்வதேசக் கூட்டமைப்பு (ICIJ), ஏப்ரல் 27ஆம் திகதியன்று ஒப்புக்கொண்டுள்ளது என பாகிஸ்தானிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
துப்பறியும் பத்திரிகையாளர்களின்; சர்வதேசக் கூட்டமைப்பினால் நவாஸ் ஷெரிபின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளமை, பாகிஸ்தானில் விவாதப் பொருளாக மாறியதுடன், பாகிஸ்தானிய ஊடகங்கள் அவற்றை வெளியிட்டமை குறிப்பிடதக்கது.
துப்பறியும் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு, அதன் தவறினை இணையத்தளத்திலே ஒப்புக்கொண்டுள்ளதுடன், இணையத்தளத்திலிருந்து நவாஸ் ஷெரிப் தரவுகள் மற்றும் பெயரினை நீக்கியுள்ளதுடன் உண்மையான பனாமா தகவல் பட்டியலில் அவரது பெயர் உள்ளடங்கப்படவில்லை.
அக்கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இவ்விளக்கமானது, பிரதமர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஆதரமற்ற அப்பட்டமான குற்றச்சாட்டுக்களையும் நீக்கவேண்டும் என அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago