2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பனாமாவில் சிக்கியோரை அரசாங்கம் பாதுகாக்காது

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வரி ஏய்ப்புச் செய்வதற்காக, பனாமாவில் மொஸக் பொன்செகா நிறுவனத்தில், சட்டவிரோதமான முறையில் பணத்தை வைப்பிலிட்டுள்ள இலங்கையர்களை, எவ்வாறான வகையிலும் சட்டரீதியான வகையில் அரசாங்கம் பாதுகாக்காது' என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி, அவ்வாறான முறையில் எந்தவொரு நாட்டிலும் பணத்தை வைப்பிலிடமுடியாது. அவ்வாறு, சட்டவிரோதமான முறையில் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X