2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டி விபத்து 7 பேருக்கு பிணை

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டிய பகுதியில்  வைத்து, பொரளை பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி மீது டிபென்டர் வாகனத்தை மோதிய சம்பவம்   தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  8 சந்தேக நபர்களுள்  7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 8 பேரும் இன்றைய தினம் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, சந்தேகநபர்கள் 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன், கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சுதம்மிக ஆட்டிகல ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த டிபென்டர் வாகனத்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X