Editorial / 2026 ஜனவரி 13 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடுவளை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago