2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

R.Maheshwary   / 2021 மே 09 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ​தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் நாள்களில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என, 4 வைத்திய சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கல் மற்றும் அவசர சிகிச்சை கட்டில்கள்  என்பவற்றில் ஏற்கனவே  தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கான செலவுகள் எதிர்காலத்தில் பாரியளவில் அதிகரிக்கும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .