Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை, தலைமையக பொலிஸாரால் சேனைக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போயா விடுமுறை நாளான திங்கட்கிழமை (06) அன்று மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் மாறுவேடத்தில் சென்று இக் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைதானவர் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 40 க்கும் மேற்பட்ட பியர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .