Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலூரின் அழகிய பாலாறு ஆற்றங்கரை ஓரத்தில், விருதம்பட்டு அருகிலுள்ள சர்ச் காலனி என்ற அமைதியான பகுதியில், புதிதாகத் திருமணமான அர்வின் ஜான் மற்றும் ஸ்டெல்லா என்ற தம்பதியினரின் வாழ்க்கை ஒரு கனவு போலத் தொடங்கியது.
நல்ல வேலை, ஊதியம், அமைதியான வீடு – எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், கடந்த செப்டம்பர் 25-ஆம் திகதி, அந்த அமைதி சிதறியது. ஸ்டெல்லா திடீரென மாயமானார்.
அர்வின் ஜான், உறவினர்கள், தோழிகள் என எல்லா இடங்களிலும் தேடினார். கடைசியில், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.காவல்துறை விசாரணை தொடங்கியது. ஸ்டெல்லாவின் தொலைபேசி அழைப்பு வரலாறு ஆய்வு செய்யப்பட்டது.
அதில், சிவகுமாரன் என்ற ஒரு நபருக்கு அடிக்கடி அழைப்புகள் சென்றிருந்தது தெரியவந்தது. அர்வின் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, "சிவகுமாரன் யார் என்றே தெரியாது" என்று கூறினர். சிவகுமாரனை தொடர்பு கொண்டபோது, "எனக்கும் ஸ்டெல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பெங்களூரில் இருக்கிறேன்" என்று மறுத்தார். நேரில் விசாரணைக்கு வர மறுத்து, "போனிலேயே கேளுங்கள்" என்று சொன்னார்.
போலீசார் ஸ்டெல்லாவின் இருப்பிடத்தை கண்டறிய முயன்றனர். அவர் போன் நம்பரை மட்டும் மாற்றியிருந்தார், போனை அல்ல. அதன் மூலம், பெங்களூரு சர்தார் புரா பகுதியில் அவர் இருப்பது தெரியவந்தது. நான்கு பேர் கொண்ட தனிப்படை பெங்களூர் சென்றது. ஸ்டெல்லாவின் புகைப்படத்தை கடைகளில் காட்டி தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சிவகுமாரனும் ஸ்டெல்லாவும் போன்களை ஆஃப் செய்திருந்தனர்.மீண்டும் கால் ஹிஸ்டரியை பார்த்தபோது, ஸ்டெல்லா தனது தோழி ஜெனிஃபருடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தவர்கள்.
வேலூர் பாகாயம் பகுதியில் வசிக்கும் ஜெனிஃபரை அழைத்து விசாரித்தபோது, திடுக்கிடும் உண்மை வெளியானது. "சிவகுமார் எங்கள் நிறுவன மேலாளர். அவரும் ஸ்டெல்லாவும் காதலித்தனர். இருவரும் திட்டமிட்டு பெங்களூருக்கு ஓடிவிட்டனர். திருமணம் செய்திருக்கலாம்" என்று கூறினார்.
இதை கேட்ட ஸ்டெல்லாவின் கணவர் அர்வின் ஜான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெனிஃபரை அடிக்க பாய்ந்தனர். இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா..? என்று கேட்டு கடும் சொற்களால் திட்டினர்.
அவர்களிடமிருந்து ஜெனிஃபரை பத்திரமாக மீட்ட காவல் துறையினர் அவரிடம் இருந்த ஸ்டெலாவின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த உரையாடலில், ஸ்டெல்லா தனது கணவரைப் பற்றி புகார் செய்திருந்தார்: "அர்வின் உடலுறவில் முழுமையாக ஈடுபடுவதில்லை. ஆணுறை அணிந்துதான் வருகிறார். குழந்தை வேண்டும் என்று கூறியும், வீடு கட்டிய பிறகு என்று தள்ளிப்போடுகிறார். குடித்திருந்தால் மட்டும் தான் என்னுடைய உறவு கொள்ளவே வருகிறார். அப்போதும் ஆணுறையுடன் தான்.. எனக்கு 25 வயது, அவருக்கு 39. இது என் எதிர்காலத்துக்கு கேள்விக்குறி." என விசனத்துடன் புலம்பியுள்ளார்.
மட்டுமில்லாமல், தன்னுடைய மேலாலாளர் சிவகுமாருடனான காதலையும் பகிர்ந்திருந்தார். இந்த உண்மை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சி. அர்வினின் குடும்பம், குழந்தை இல்லாததற்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஸ்டெல்லாவின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
போலீசார் ஸ்டெல்லாவை தொடர்பு கொண்டபோது, "நாங்கள் பெங்களூரில் இருக்கிறோம். திருமணம் செய்துகொண்டோம்" என்று கூறினர். எங்களை விட்டுடுங்க இல்லனா ரெண்டு பேரும் தவறான முடிவை தேடிக்குவோம் என பெற்றோர்களிடம் அழுதார்.
காவல்துறை, "இது குடும்ப விவகாரம். நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று CSR பேப்பரை மட்டும் அர்வின் ஜான் கையில் கொடுத்து அனுப்பினர்.இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago