Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வந்த ஒரு பெண் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகமாக வந்த மோட்டார் வாகனம், லாரியை முந்திச் செல்லும் போது பிரேக்கைப் பிடித்ததாக நினைத்து, எக்ஸ்லேட்டரை அமத்தியதால் மோட்டார் வாகனம், வேகமாகச் சென்று, வீதியில் பயணித்தவர்களை மோதித்தள்ளியுள்ளது. விஹாரைக்கு சென்று, வீடு திரும்பியவர்களே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .