Freelancer / 2025 நவம்பர் 24 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் பரீட்சைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகளை மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்த சந்தர்ப்பங்களில் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்லத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு முன்னதாகவே வருகை தரத் திட்டமிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (a)
6 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
35 minute ago