Nirosh / 2021 ஜூன் 03 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் ஆதரவாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்காது, சுகாதார துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை இன்று முன்னெடுத்த நிலையில், அரச தாதியர் சங்கம் உட்பட ஆறு சுகாதார அமைப்புகள் இணைந்து, மட்டக்களப்புக் களுவாஞ்சிகுடியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியதோடு,“ சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தங்களது பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளினை முன்வைத்தே பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.“ என்றார்.
இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு அமைய அரசாங்கம், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும், விசேடமாக குறித்த ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தடுப்பூசியினை வழங்காவிட்டால் தங்களுடைய பாதுகாப்பை, தங்களது குடும்பத்தினருடைய பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத அபாய நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago