Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் திங்கட்கிழமையுடன் (15) நிறைவுபெற்றது.
நேற்று வரை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 5,000 ஆயிரம் முறைப்பாட்டுக்கான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவுக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகளில் 12,000 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளன. இதன் காரணமாக ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு கோரிய போதும், அதற்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார்.
விசாரணைகளை நிறைவு செய்வதற்காக கால எல்லையை நீடிக்குமாறு, ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்க ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
யுத்த காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் ஆணைக்குழுவுக்கு சுமார் 21 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
12 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
45 minute ago