2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பிரதமரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

Editorial   / 2026 ஜனவரி 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

தனது பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Jiyoon Chung), ஜனவரி 14 ஆந் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற பிரதமர், தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த தூதுவர் ஜூலி ஜியூன் சங் வழங்கிய சேவை மற்றும் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். திட்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசரகால சூழ்நிலையிலிருந்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசு வழங்கிய உதவியையும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.

தனது பதவிக் காலத்தில் இலங்கை அரசாங்கம் தனக்கு வழங்கிய பரஸ்பர ஆதரவைப் பாராட்டிய திருமதி ஜூலி ஜியூன் சங், புதிய இலங்கை அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை உறுதிப்படுத்தினார்.

Fulbright புலமைப் பரிசில் திட்டம் மற்றும் அமெரிக்க அமைதிப் படைத் (Peace Corps)  திட்டத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாட்டு மக்களிடையே நட்புறவையும் நீண்டகால ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தூதரகத்தின் துணைத் தலைவர் திருமதி ஜெய்ன் ஹோவெல், பொதுமக்கள் மற்றும் கலாசார விவகார ஆலோசகர் திருமதி மேனகா நாயர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் வெளியுறவு அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் பிரமுதிதா மனுசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X