Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 23 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவது போன்றே பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(22) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இடையீட்டுக் கேள்வி ஒன்றை எழுப்பியே இவ்வாறு வலியுறுத்தினார்.
வேலையாட்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை டிசெம்பர் வரை 27,000 ரூபாய் வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை 30,000 ரூபாவாக அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நல்லதொரு விஷயம் என்பதால் இதனை நாம் ஆதரிப்போம்
அரசாங்கம், ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ என்ற தனது கொள்கை அறிக்கையில் மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் சமூகத்தினரின் அன்றாட வேதனத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்போம் என வாக்குறுதி வழங்கி இருந்தபோதிலும், இன்று அந்த வாக்குறுதியை மறந்து விட்டுச் செயல்படுகிறது. நாட்டில் குறிப்பிட்டதொரு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச வேதனம் டிசம்பர் வரை 27,000 ரூபாய் வரையிலும், ஜனவரி மாதம் முதல் .30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் போது மலையக பெருந்தோட்ட, தாழ் நில சிறு தோட்ட சமூகத்தை மறந்துவிட்டனர். தேயிலை, ரப்பர், தென்னம் தோட்டங்கள் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்களில் ஈடுபட்டுள்ளவர்களும் காணப்படுகின்றனர். முறையான கணக்கெடுப்புக்கு ஏற்ப அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் மிகக் குறைந்த அளவை மாத்திரம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால், தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நாம் அறிய விரும்புகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதா கிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை சம்பளம் 1,700 ரூபாய் என்ற வாக்குறுதியைச் செயற்படுத்தும் திருத்தம் ஒன்றை முன்வைப்பதனால், இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கோருகின்றேன் என்றார்.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago