2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரந்தனில் முதலீடு செய்ய அங்கிகாரம்

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் கோஸ்ரிக் சோடாஃகுளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியவளக் கற்கையை வரையறுக்கபட்ட பரந்தன் இரசாயனக் கம்பனியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

 தொடர்ந்துவரும் காலங்களில் தொழிற்சாலையை குறித்த இடத்திலேயே அமைப்பதற்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 தற்போது பரந்தன் இரசயானக் கம்பனி குளோரின் இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகித்து வருகின்றதுடன், நாட்டின் நீர் சுத்திகரிப்புக்கான ஒட்டுமொத்த குளோரின் இறக்குமதி செய்யப்படுவதால்,உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தடைகள் ஏற்படும் போது, நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பு முழுமையாக நிறுத்தப்பட வேண்டிய இடர்கள் காணப்படுகின்றன.

அத்துடன், குளோரின் இறக்குமதிக்காக செலவாகும் வெளிநாட்டு செலாவணியைக் குறைத்துக் கொண்டு, நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு குளோரின் உற்பத்தித் தொழிற்சாலையை உள்நாட்டிலேயே நிர்மாணிப்பது தேசிய ரீதியில் முக்கியம் வாய்ந்த பணியாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அத்துடன், உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், 95 நேரடி வேலைவாய்ப்புக்களும் அண்ணளவாக 2,000 மறைமுக வேலைவாய்ப்புக்களும் உருவாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனி அமைந்துள்ள காணியில் குறித்த கம்பனிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியில் உத்தேச கருத்திட்டத்தை அரச – தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக மேற்கொள்வதற்காக ஆர்வங் காட்டுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .